Technical Graduate Course 123
ssb coaching academy இ ந்திய ராணுவத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகள், பயிற்சியுடன்கூடிய அதிகாரி பணியில் சேர்க்கப்படுகிறார்கள். ராணுவ கல்விப் பிரிவில் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- ராணுவ பணிகள், நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் பெற்றுத் தருகின்றன. எனவே ராணுவப் பணிகளில் சேர்வதை இளைஞர்கள் பெருமையாக கருதுகிறார்கள். அதற்கேற்ப இந்திய ராணுவத்தில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 123-வது டெக்னிக்கல் கிராஜுவேட் கோர்ஸ் (TGC123) என்ற பயிற்சித் திட்டத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். மொத்தம் 70 பேர் சேர்க்கப்படுகிறார்கள். திருமணமான மற்றும் திருமணமாகாத, இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள், 1-7-2016 தேதியில் 20 வய