Technical Graduate Course 123

ssb coaching academy

ந்திய ராணுவத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகள், பயிற்சியுடன்கூடிய அதிகாரி பணியில் சேர்க்கப்படுகிறார்கள். ராணுவ கல்விப் பிரிவில் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-


 ராணுவ பணிகள், நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் பெற்றுத் தருகின்றன. எனவே ராணுவப் பணிகளில் சேர்வதை இளைஞர்கள் பெருமையாக கருதுகிறார்கள். அதற்கேற்ப இந்திய ராணுவத்தில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது 123-வது டெக்னிக்கல் கிராஜுவேட் கோர்ஸ் (TGC123) என்ற பயிற்சித் திட்டத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். 

மொத்தம் 70 பேர் சேர்க்கப்படுகிறார்கள். திருமணமான மற்றும் திருமணமாகாத, இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள், 1-7-2016 தேதியில் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2-7-1989 மற்றும் 1-7- 1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே.

கல்வித்தகுதி :

சிவில், மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல்,  கம்ப்யூட்டர் சயின்ஸ், டெலிகம்யூனிகேஷன், சேட்டிலைட் கம்யூனிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் பி.இ./பி.டெக் பட்டம் பெற்றவர்களும், எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்களுக்கு ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தேர்வு செய்யபடுவோர் ஒரு ஆண்டுகால பயிற்சிக்கு பின் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணியாகும்.

விண்ணப்பிக்கும்  முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 27-10-2015-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை இரண்டு கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதை அனுப்ப வேண்டிய தேவை இல்லை.

கல்விப் பிரிவில் பணி:
இதேபோல ஆர்மி எஜுகேசன் கார்ப்ஸ் எனும் ராணுவ கல்விப் பிரிவில் 123-வது சேர்க்கையின் அடிப்படையில் 10 பேர் கல்விப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆங்கிலம், பொருளாதாரம், ஜியோகிராபி, புவி அறிவியல், தத்துவவியல், உளவியல், சோசியாலஜி, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன், புள்ளியியல் போன்ற முதுகலை படிப்புகளுக்கும், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், ஜியாலஜி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற முதுநிலை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கும், சீனம், அரபி, திபெத்திய மொழி உள்ளிட்ட மொழிப்பாடங்களை படித்தவர்களுக்கும் இதில் பணி வாய்ப்பு உள்ளது. 23 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர 27-10-15-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவை பற்றிய, விரிவான விவரங்களை   www.joinindianarmy.nic.in  என்ற இணையத்தில் பார்க்கலாம்.

We would like to hear it from you
Like us on Face book
Our blog at
Our website at
and
For Quires call us
Ph No +919443720076




Common Admission Test for Rashtriya Military School 2016-17.
Date of Examination 20th December 2015
Defence Offers
a) Residential coaching
b) Supplies self study kit
c) Online Practice entrance Examination
We would like to hear it from you
Like us on Face book
Our blog at
Our website at
and
For Quires call us

Ph No +919443720076

Comments

Popular posts from this blog

GK Questions for RIMC- RMS Compiled by www.sainikrimc.com

Picture Perception - Model story

RIMC December 2017 General Knowledge Solved paper