Get trained to become a solider- airmen- sailor- or Navkis or Constable for Rs. 3000 per month

Defence Academy Coimbatore A leading coaching academy for Sainik, Military and RIMC Schools, NDA, IMA, AFCAT SSB, FSB Interview http://www.ssbcoaching.com call 094437 20076


Get trained to become a solider- airmen- sailor- or Navkis or Constable for Rs. 3000 per month
call 094437 20076



ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புத்துறையின் 4-வது தூணாக திகழ்கிறது. நாட்டின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதுடன், கடல் மார்க்கமாக நடக்கக் கூடிய போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது, கடலில் தத்தளிக்கும் கப்பல்கள் மற்றும் மீனவர்களை மீட்பது போன்ற பணிகளில் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேவையான தகுதி
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்தியக் கடலோரக் காவல் படையில், நாவிக் என்ற பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களாக இருந்தால் 55 சதவீத மதிப்பெண் போதுமானது. வயது 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தகுதியானோர் 10-ம் வகுப்பு மதிப்பெண், எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன், மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் நவம்பர் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.joinindiancoastguard.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான விவரங்களைக் கடலோர காவல்படையின் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

GK Questions for RIMC- RMS Compiled by www.sainikrimc.com

Picture Perception - Model story

RIMC December 2017 General Knowledge Solved paper